பிரான்ஸின் UNEP ஆட்டநாயகன் கோப்பையை எம்பாப்பே 8வது முறையாக வென்றுள்ளார்.
எம்பாப்பேவுக்கு விருது
பிரான்ஸ் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கைலியின் எம்பாப்பே, உலகக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி 8 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.
சவுதியில் நேற்று நடந்த ரியாத் லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்தார்.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான கோப்பையை எம்பாப்பே வென்றுள்ளார்.
Ah là, on est bien !
Nouvelle année, même Kylian ! C’est la 8ème fois de sa carrière qu’il remporte le Trophée UNFP du Joueur du Mois 😱
🏆🏆🏆🏆 🏆🏆 🏆🏆 (ça commence à faire beaucoup, on aura bientôt plus de place…)
Félicitations Kylian 👏#TropheesUNFP pic.twitter.com/fNUOWfpKH4
— UNFP (@UNFP) January 19, 2023
8வது முறையாக வென்ற எம்பாப்பே
பிரான்ஸ் கால்பந்து நிர்வாகத்தின் UNEP இந்த கோப்பையை வழங்குகிறது. 24 வயதாகும் எம்பாப்பே இந்த கோப்பையை வெல்வது 8வது முறையாகும்.
தற்போது அவர் விளையாடி வரும் கிளப் அணியான PSG வெளியிட்டுள்ள பதிவில்,
‘UNEP-யின் நவம்பர்/டிசம்பர் கோப்பையின் வெற்றி வீரர் எம்பாப்பேவுக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளது.
Félicitations à @KMbappe, lauréat du Trophée @UNFP du Joueur de Novembre/Décembre ! 👏❤️💙
— Paris Saint-Germain (@PSG_inside) January 20, 2023
