டெல்லி: பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனையை முறையாக கையாளவில்லை என்று கூறி விமான போக்குவரத்து இயக்குனகரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது. அநாகரிக நிகழ்வு நடந்தபோது விமானத்தை இயக்கிய விமானியின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்துக்கு ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
