Sundar C, Aranmanai 4: 'அரண்மனை 4' படத்திற்கான வேலைகளில் இறங்கிய சுந்தர் சி: ஹீரோ இவரா..?

கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் அதனை தொடர்ந்து அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்தப்படத்தின் நான்காம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

ஹாரர் காமெடி ஜானரில் வெளியாகும் சுந்தர் சியின் அரண்மனை சீரிஸ்க்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதன் மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், சம்பத், யோகி பாபு, மனோபாலா மற்றும் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்தை சுந்தர் சி யின் அவ்னி மூவிஸ் சார்பாக குஷ்பு தயாரித்தார். முதல் இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 அதிக பொருட் செலவில் படமாக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. இதனையடுத்து ‘காபி வித் காதல்’ படத்தை இயக்கினர் சுந்தர் சி.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், சம்யுக்தா ஹெக்டே, டிடி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் வெளியான ‘காபி வித் காதல்’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெறவில்லை. இந்நிலையில் ‘அரண்மனை 4’ படத்தை இயக்கும் வேலைகளில் சுந்தர் சி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Varsiu: அந்த புருடாவை மன்னிக்கவே முடியாது: வாரிசை ரவுண்டு கட்டும் ப்ளூ சட்டை மாறன்.!

மேலும் விஜய் சேதுபதி இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில், அரண்மனை சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Varisu vs Thunivu: மீண்டும் மோதலில் விஜய் – அஜித்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.