சந்திரனில் இரண்டாவதாக காலடி வைத்து சரித்திரம் படைத்தவர் 93 வயதில் செய்த செயலை பாருங்க..!!

1969-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அப்பல்லோ-11 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. முதல் முறையாக மனிதர்களை நிலவில் தரை இறக்கிய இந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்ற 3 விண்வெளி வீரர்கள் இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 இலும், மைக்கேல் காலின்ஸ் 2021 இலும் இயற்கை எய்திய பின்னர் நிலவில் காலடி வைத்த முதல் குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே நபராக எட்வின் பஸ் ஆல்ட்ரின் இருக்கிறார்.

அப்போலோ-11 பயணத்தின் போது சந்திரனில் நிலாவில் முதலாவதாக கால் வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இரண்டாவது கால் பதித்தவர் பஸ் ஆல்ட்ரின். ஆல்ட்ரின் திருமணமாகி மூன்று முறை விவாகரத்து பெற்றார். இவருக்கு தற்போது 93 வயதாகிறது.

சந்திரனில் நடந்த இரண்டாவது மனிதரான ஆல்ட்ரின் ஜன. 20 தனது 93வது வயதை எட்டினார். அன்றைய தினம் தனது சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் தனது திருமணத்தை ஆல்ட்ரின் அறிவித்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு சிறிய விழாவில் தானும் தனது நீண்ட கால காதலி டாக்டர் அன்கா ஃபாரும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது 93வது பிறந்தநாளில் எனது நீண்ட கால காதலியான டாக்டர் அன்கா வி ஃபாரும் நானும் திருமணம் செய்து கொண்டதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டோம். மேலும் ஓடிப்போன இளைஞர்களைப் போல உற்சாகமாக இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.