அரவணை பாயாச பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை..!!

அரவணை பாயாச பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் அரவணை பாயாசம் முக்கியமானது.ஏராளமான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை வழிபட்டு வருவது வழக்கம். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அரவணைப் பாயாசத்தை தங்களின் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், FSSAI அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலையில் அரவணை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் 14 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணை தொகுப்புகளின் விற்பனையை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணா தொகுப்புகளின் விற்பனையை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் 6,65,159 அரவணப் பிரசாதம் அடங்கிய டின்களை அழிக்கபட்டன. இதனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.