கே.என்.நேரு: கழுத்தை பிடிச்ச இழுத்து… அப்பப்பா… சைலண்டா இருந்த உதயநிதி!

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளை கடந்த ஒருவார காலமாக களத்தில் இருந்து அமைச்சர்
கே.என்.நேரு
செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உதயநிதி ஸ்டாலின் சேலம் மாவட்டத்திற்கு வந்திருந்தார். மாவட்ட எல்லையான தலைவாசல் பகுதியில் உற்சாக வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உதயநிதி வருகை

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்ததும் மேடையில் ஏறி தொண்டர்களை சந்தித்தார். ஒவ்வொருவராக மேடைக்கு சென்று வணக்கம் தெரிவித்தனர். புத்தகங்கள், சால்வை உள்ளிட்டவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றதால் விழா மேடை பரபரப்பாக காட்சி அளித்தது. அப்போது தொண்டர்களை வேகமாக செல்லுமாறு அமைச்சர் கே.என்.நேரு சொல்லிக் கொண்டே இருந்தார்.

விரட்டிய கே.என்.நேரு

இந்த சூழலில் தொண்டர் ஒருவரின் கழுத்தை பிடித்து தள்ளினார். இதை சைலண்டாக உதயநிதி ஸ்டாலின் கவனித்தார். அடுத்தடுத்து தொண்டர்கள் வந்து கொண்டே இருந்ததால் யாராலும் பொறுமையாக செயல்படவில்லை. வேகமாக செல்லுங்கள் என விரட்டி கொண்டே இருந்தனர். இந்த சூழலில் அமைச்சர் கே.என்.நேரு வலுக்கட்டாயமாக கழுத்தை பிடித்து தொண்டரை தள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படியா செய்வது?

உதயநிதியை சந்திக்க வந்திருந்த தொண்டர்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் அடங்குவர். அவர்கள் அனைவரையும் இப்படியா விரட்டுவது? தொண்டர்கள் இல்லாமல் கட்சி ஏது? முதல்வர் மகன் வந்திருக்கிறார் என்பதற்காக சக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அமைச்சர் கே.என்.நேரு அலட்சியமாக நடத்தியது மிகவும் வேதனை அளிப்பதாக திமுகவின் உடன்பிறப்புகளே புலம்புவதாக சொல்லப்படுகிறது.

சிக்கிய நாசர்

இந்த விஷயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தால் நிச்சயம் வருத்தப்படுவார். கண்டிக்கவும் கூடும். சமீபத்தில் தான் அமைச்சர் நாசர் தொண்டர் ஒருவரிடம் சேர் எடுத்து வர தாமதமான விஷயத்தில் கீழே கிடந்த கல்லை தூக்கி எறிந்து சர்ச்சையில் சிக்கினார். இதேபோல் அமைச்சர்கள் மாறி மாறி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

முதல்வர் கண்டனம்

விழாவில் மேடைகளிலும், அறிக்கை வாயிலாகவும் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
கண்டனம் தெரிவித்து வருகிறார். நம் தரப்பில் இருந்து தவறுகள், குறைகளுக்கு குன்றிமணி அளவு கூட இடம் தரக்கூடாது. ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.

உ.பி.,க்கள் கவலை

ஆனாலும் திமுக அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்திருந்தார். ஆனால் யாரையும் விடுவிக்கவில்லை. அப்படி ஒரு சூழலுக்கு முதல்வரை தள்ளி விடாதீர்கள் என்று உடன்பிறப்புகள் கேட்காத குறை தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.