பட்ஜெட் 2023 எப்படி இருக்கும்?… மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் முக்கிய அப்டேட்..!

அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் பட்ஜெட் அமையும் என விருதுநகரில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டியளித்துள்ளார்.

விருதுநகர் பி.எஸ். சி ஆங்கிலப் பள்ளியில் பாரத பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக மாணவர்களுடன் கலந்துரையாடும் “பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

ஈ.வி.கே.எஸ்க்கு செந்தி்ல்பாலாஜி வாழ்த்து

“பரிக்‌ஷா பே சார்ச்சா” என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்த மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். விருதுநகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், “இந்த நிகழ்ச்சி மூலம் நட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாணவர்களிடையே உள்ள தேர்வு பயத்தை நீக்கி, மன தைரியத்துடனும் தேர்வை எதிர்கொள்ளச் செய்யும் வகையில் ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.

டெல்லி – மும்பையிடையேயான எஸ்பிரஸ் சாலைப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. விரைவில் இச்சாலை வாகன போக்குவரத்திற்காக திறந்து விடப்படும். சாலை கட்டமைப்புக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்திற்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு ஏராளமான நிதி அளித்துள்ளது. சென்னை துரைமுக சாலை பணிகளுக்கும் தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகள் சமமாக இருக்கும் வகையில் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அமையும்.

மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பந்தூர் விமான நிலைப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் தமிழக அரசின் முடிவு. இத்திட்டம் முடிக்கப்பட்டால் தமிழகத்திற்கான விமான சேவை மேலும் விரிவடையும் என்றார்.

மேலும் இந்த நிகழ்வின்போது பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.