ஆம்புலென்ஸிற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஓ.சௌதாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்து இவருக்கு நேற்று மாலை திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.முத்துவின் உறவினர்கள் 108 அவசர ஊர்தி வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்து முக்கத்தான் காடு தோட்டத்திற்கு அவசர ஊர்தி வாகனம் ஆனது சென்று கொண்டிருந்தது அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வழியாக வாகனம் செல்ல அனுமதிக்க முடியாது என கற்களை கொண்டு பாதையை வழி மறைத்துள்ளார். அவசர ஊர்தி வாகனம் ஆனது நீண்ட நேரம் காத்திருந்த பிறகு அங்கிருந்து திரும்பி சென்றது. 

பாதையை வழி மறைத்த நபரால் முத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த முத்துவின் உடல் அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினர் உடலை வீட்டில் வைத்து தவித்து வருகின்றனர் இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 108 வாகனத்திற்கு வழி விடாமல் வாகனம் நிற்கும் வீடியோ உள்ளது. 

ராசிபுரம் அருகே அவசர ஊர்தி வாகனத்திற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக முதியவர் உயிரிழந்த சமப்வம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.