தேனிலவுக்காக வெளிநாடு சென்ற கனேடிய தம்பதி: வாழ்வே மாறிப்போன சோகம்


தேனிலவுக்காக கனேடிய தம்பதியர் மெக்சிகோ சென்ற நிலையில், மணமகள் சந்தித்த விபத்தால், வாழ்வின் இனிமையான காலகட்டமாக நினைவுகூரவேண்டிய நாட்கள் சோகமானவையாக மாறிப்போயின.

வாழ்வையே புரட்டிப்போட்ட கடல் அலை

டிசம்பர் மாதம் திருமணமான Saskatchewanஐச் சேர்ந்த கோரி (Cory Moe, 26)ம், அவரது கணவரான Daltonம், இம்மாதம் மெக்சிகோவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தனர்.

அப்போது கடலில் சர்ஃபிங் செல்ல விரும்பியுள்ளார் கோரி.

ஆனால், திடீரேன வீசிய பெரிய அலை ஒன்று வாழ்வையே புரட்டிப்போட்டுவிட்டது..

தேனிலவுக்காக வெளிநாடு சென்ற கனேடிய தம்பதி: வாழ்வே மாறிப்போன சோகம் | Canadian Couple Went Abroad For Their Honeymoon

Courtesy: Brianne Fitzpatrick

அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டு கடலுக்குள் உள்ளிழுக்கப்பட்ட கோரியை மீட்டு கரைக்குக் கொண்டு வந்திருக்கிறார் அவரது கணவர்.

அதிர்ஷ்டவசமாக, அங்கு இரண்டு செவிலியர்கள் விடுமுறைக்காக வந்திருக்க, அவர்கள் கோரிக்கு முதலுதவி சிகிச்சையளித்துள்ளார்கள்.

சோகமானதாக மாறிப்போன தேனிலவு

தேனிலவு வாழ்வின் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக இருக்க, கோரிக்கும் அவரது கணவருக்குமோ, அது பயங்கரமான ஒரு அனுபவமாக மாறிப்போனது.

கோரியின் கழுத்துப்பகுதியில் உள்ள முதுகெலும்பில் அடிபட்டுள்ளதால், ஆபத்தான நிலைக்குச் சென்ற அவர், அறுவை சிகிச்சைக்குப்பின் பேசக்கூட முடியாத ஒரு நிலையில் அவர் காணப்படுகிறார்.

தேனிலவுக்காக வெளிநாடு சென்ற கனேடிய தம்பதி: வாழ்வே மாறிப்போன சோகம் | Canadian Couple Went Abroad For Their Honeymoon

Courtesy: Brianne Fitzpatrick

அவர் குணமடைய பல வாரங்கள் வரை ஆகலாம் என்பதால், குறைந்தபட்சம் அவரை சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் அளவுக்காவது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என அவரது குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

கோரியும் ஒரு செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தேனிலவுக்காக வெளிநாடு சென்ற கனேடிய தம்பதி: வாழ்வே மாறிப்போன சோகம் | Canadian Couple Went Abroad For Their Honeymoon

Courtesy: Brianne Fitzpatrick




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.