நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்து நகரில் நேற்று பெய்த கனமழையால் அந்நகரமே நீரில் மூழ்கியது. கோடை காலம் முழுவதும் பெய்யும் மழையில் 75 சதவீதம் மழை 15 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடானது, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின, தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது. எல்டன் ஜான் இசைநிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் 40,000 க்கும் மேற்பட்டோர் அந்த இசைநிகழ்ச்சியை காண குவிந்தனர். இசை நிகழ்ச்சி துவங்குவதற்கு சில […]