
இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான வினோத்குமார், விஜயகுமார் ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வினோத்குமாருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார்.
விஜயகுமார் – ஜெயா தம்பதிக்கு நிகிதா, நிகிஷா என்ற 2 இரட்டை பெண் குழந்தைகள். மாமியார் தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு மருமகள்கள், குழந்தைகள் ஆகியோர் பென்னகோணம் கிராமத்தில் வசித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜெயா ஒரு வாரத்திற்கு முன்பு பென்னகோணம் கிராமத்திற்கு குழந்தைகளுடன் வந்தார்.

இரவு அறைக்கு குழந்தைகளுடன் தூங்கச் சென்ற காலையில் வெளியே வரவில்லை. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் கதவை உடைத்து பார்த்தபோது ஜெயா மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.
பெண் குழந்தைகளான நிகிதா(2) மற்றும் நிகிஷா(2) ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதைப்பார்த்து குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கான குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வி, வினோத்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
newstm.in