
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு, பிரச்சாரம் என்று தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
காங்கிரஸ் சார்பில் ஈபிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக இரண்டு பிரிவாக இருப்பதால் வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஓபிஎஸ் அணி விரைவில் வேட்பாளரை அறிவிப்போம் என கூறியுள்ளது.

அதே நேரத்தில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஈபிஎஸ் அணியினர் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களாக நடத்தி வருகின்றனர். தேர்தல் பணிக்குழு கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் என்ற பெண் போட்டியிடுகிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார். இம்முறை அதே போன்று வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெறும் என்று கருதப்படுகிறது.
newstm.in