வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் லோக்சபாவில் பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ராகுல் நேற்று(பிப்.,07) லோக்சபாவில் பேசுகையில், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில், அதானி உடன் வந்தது எத்தனை முறை? நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின், அவர் உங்களுடன் இணைந்தது எத்தனை முறை? நீங்கள் பயணம் முடித்து திரும்பிய பின், அந்த நாட்டுடன் அதானி போட்ட ஒப்பந்தங்கள் எத்தனை?.
இவ்வாறு கூறிவிட்டு, பிரதமரும், அதானியும் விமான பயணத்தில் ஒன்றாக இருக்கும் படத்தையும், பின்புறம் அதானி நிறுவனத்தின் ‘லோகோ’ இருக்க, பிரதமர் உரையாற்றுவது போல ஒரு படத்தையும் ராகுல் துாக்கிப்பிடித்தார். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?. மக்கள் அதனை தெரிய விரும்புக்கின்றனர். அதானிக்காக சட்டம் வளைக்கப்பட்டுள்ளது என பேசினார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் குறித்து ராகுல் பேச்சுக்கு எதிராக பாஜ.,வினர் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி நிசாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஊழல்வாதிகளை பாதுகாப்பதுதான் காங்.,
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மீது காங்., எம்.பி ராகுல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்திய மிகப்பெரிய ஊழல்களை அனைத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழல் செய்வதும் ஊழல்வாதிகளை பாதுகாப்பதுதான் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement