கண்கலங்கிய சிவராஜ்குமார் : ஆறுதல் சொன்ன பாலகிருஷ்ணா

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் தற்போது தமிழ் திரையுலகிலும் நுழைந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் அவர் நடித்துள்ள வேதா திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் சிவராஜ் குமார் நடிப்பில் முதன்முறையாக பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு வருகிறார் சிவராஜ் குமார்.

அந்த வகையில் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு திரையுலகின் அதிரடி ஹீரோவான பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிவராஜ்குமாரின் சகோதரரும் மறைந்த நடிகருமான புனித் ராஜ்குமார் பற்றிய வீடியோ ஒன்று திரையிடப்பட்டது. அதை பார்த்த சிவராஜ்குமார் தன்னை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

அவரது அருகில் அமர்ந்திருந்த நடிகர் பாலகிருஷ்ணா அவரை தோளோடு அனைத்து ஆறுதல் கூறி தேற்ற முயன்றார். ஆனாலும் சிவராஜ்குமாரால் உடனடியாக அழுகை நிறுத்த முடியவில்லை. அவர் அருகில் அமர்ந்திருந்த சிவராஜ் குமாரின் மனைவியும் இதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டார். ஒரு வழியாக அதிலிருந்து தேறிய சிவராஜ் குமார் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பி நிகழ்ச்சியில் தனது பங்களிப்பை வழங்கினார். தனது சகோதரர் மீது சிவராஜ்குமார் இந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறாரா என்பதை அறிந்த புனித் ராஜ்குமார் ரசிகர்கள் தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.