
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடித்து வரும் படம் ‘வாத்தி‘. இந்த படம் தெலுங்கில் ‘சார்‘ என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 17-ம் தேதி படம் ரிலீஸாகிறது என தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.