பெங்களூரு : பஹ்ரைனில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்திய தமிழக பயணி கைதானார்.
பஹ்ரைனில் இருந்து, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, கடந்த ௪ம் தேதி விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணி, தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது.
இதனால் பயணியரை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி அணிந்திருந்த சட்டை வித்தியாசமாக இருந்தது. அவரை தனியாக அழைத்து சென்று, சோதனை செய்தனர்.
அப்போது பயணி தனது சட்டையில், மறைத்து வைத்து தங்கம் கடத்தியது தெரிந்தது. அவரிடம் இருந்து 13.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 238 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணை நடக்கிறது.
பயணி தமிழகத்தை சேர்ந்த 42 வயது நபர், என்று தெரிந்தது. அவரது பெயர், மற்ற விபரங்கள் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement