Leo, Trisha: அது உண்மைதான்.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய த்ரிஷா… எங்கே போனார் தெரியுமா!

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை த்ரிஷா, எங்கே சென்றிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லியோநடிகர் விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட்டுகள் கடந்த வாரம் கோலிவுட் சினிமாவை திணறடித்து வந்தது. தளபதி 67 என குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்திற்கு லியோ என டைட்டில் வைத்துள்ளனர்.
​ AK62: 4 மாசம்தான் டைம்… ஆர்டர் போட்ட அஜித்… மண்டையை பிய்த்துக்கொள்ளும் மகிழ்!​
14 வருடங்களுக்கு பிறகுவிஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி உறுதியானதுமே மொத்த படக்குழுவும் தனி விமானத்தின் மூலம் காஷ்மீர் புறப்பட்டனர். விமானத்திற்குள் படக்குழுவுடன் ஜாலி செய்த விஜய், வீடியோ எடுத்து மகிழ்ந்தார். அந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து லியோ படத்தின் பூஜை போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதனை பார்த்த ரசிகர்கள் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் த்ரிஷா காம்போ மீண்டும் இணைந்திருப்பதை கண்டு மகிழ்ந்தனர். ​ Samantha: அடடே… சம்முவுக்கு நல்ல காலம் பொறந்துடுச்சி… மும்பையில் நடந்த அந்த அதிசயம்!​
பைபை சொன்ன த்ரிஷாஇந்நிலையில் நடிகை த்ரிஷா படக்குழுவினருக்கு பை பை சொல்லிவிட்டு விமான நிலையத்தில் இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதனால் த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டார் என்று கூறப்பட்டது. லியோ படத்தில் த்ரிஷாவுக்கு ஸ்கோப்பே இல்லாததால், போன வேகத்தில் அவர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டார் என்றும் லோகேஷ் கனகராஜுடன் ஏற்பட்ட பிரச்சனையால் த்ரிஷா படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும் கூறப்பட்டது. ​ Khushbu: ப்பா… ஐஸ்க்ரீம் போல் இருக்கும் குஷ்பு… ஜொள்ளுவிடும் ரசிகாஸ்!​
அம்மா மறுப்புமேலும் காஷ்மீரில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுவதால், த்ரிஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் இதனால் அவர் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் படக்குழு தரப்பில் த்ரிஷா தனது காட்சிகளை முடித்துவிட்டுதான் சென்றார் என தெரிவிக்கப்பட்டது. த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய தகவலை அவரது அம்மாவான உமா கிருஷ்ணனும் மறுத்தார். த்ரிஷா இன்னும் லியோ படப்பிடிப்பில்தான் இருக்கிறார் என்றும் கூறினார். Hansika Motwani: ஒருவர் வாழ்க்கையை நாசமாக்க அது போதும்… சிம்புவுடனான உறவு குறித்து மனம் திறந்த ஹன்சிகா!​
வெளியேறியது உண்மைதான்இந்நிலையில் லியோ படப்பிடிப்பு நடைபெறும் காஷ்மீரில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறியது உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது. காஷ்மீரின் வானிலை காரணமாக நடிகை த்ரிஷா டெல்லிக்கு சென்றுள்ளார். 3 நாட்கள் அங்கு தங்கியிருந்த த்ரிஷா பின்னர் இன்று மீண்டும் காஷ்மீர் திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். காஷ்மீரில் வெப்பநிலை -1°C முதல் -3°C வரை நிலவுகிறது. இந்த தட்பவெட்ப நிலை த்ரிஷாவின் உடல்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. ​ Simbu, STR: இனி அவர் சகவாசமே வேண்டாம்… ஏணியை தூக்கியெறிந்த சிம்பு?​
டெல்லியில் த்ரிஷாஇதனால்தான் நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து வெளியேறி டெல்லியில் தங்கியிருக்கிறார். ஆனால் வதந்திகளை போல் சென்னை திரும்பவில்லை. த்ரிஷாவை போல் படக்குழுவில் உள்ள பலருக்கும் கடும் குளிரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் பனிப்பொழிவு முடிவதற்குள் சில காட்சிகளை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். ​ புருஷன்தான் முக்கியம்னு முடிவெடுத்த நயன்தாரா!​
Trisha Leo

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.