கனேடிய குடியுரிமை தொடர்பில் பிரபல இந்திய நடிகர் எடுத்துள்ள முடிவு


இந்திய நடிகரான அக்‌ஷய் குமார், தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் இந்தியரா கனேடியரா?

பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும்.

இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய். 

நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே இந்தியனாகத்தான் இருப்பேன் என்று கூறியிருந்தார் அக்‌ஷய்.

தோல்வியை சந்தித்த திரைப்படங்கள்

சில வருடங்களுக்கு முன், என்னுடைய 14, 15 படங்கள் தோல்வியடைந்துவிட்டன என்று கூறிய அக்‌ஷய், அப்போது வேறு ஏதாவது ஒரு நாட்டுக்குச் சென்று வேலை பார்க்கவேண்டும் என்று எண்ணினேன் என்று கூறினார்.

தன்னுடைய நண்பர் ஒருவர் கனடாவிலிருப்பதாகக் கூறிய அக்‌ஷய், இந்தியாவில் உன்னால் வெற்றிபெறமுடியவில்லையானால் கனடாவுக்கு வந்துவிடு என்று அவர் கூறியதாகத் தெரிவித்திருந்தார். ஏராளம் பேர் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்ய செல்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இன்னமும் இந்தியர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கனேடிய குடியுரிமை தொடர்பில் பிரபல இந்திய நடிகர் எடுத்துள்ள முடிவு | Akshay Kumar To Renounce Canada Passport

ஆகவே, என் தலைவிதி எனக்கு இந்தியாவில் உதவி செய்யவில்லையானால், நான் வேறு ஏதாவதுதான் செய்யவேண்டும் என்று எண்ணிய நான் கனடாவுக்குச் சென்றேன். கனடாவுக்குச் சென்று குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன், கனேடிய குடியுரிமையும் கிடைத்தது என்கிறார் அக்‌ஷய்.

ஆனால், அதற்குப் பிறகு தொழிலில் வெற்றியை அனுபவிக்கத் துவங்கியதாக தெரிவிக்கும் அக்‌ஷய், இந்தியாவிலேயே இருந்துவிடுவது என முடிவு செய்ததாகத் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், தற்போது, தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் அக்‌ஷய் குமார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.