ஈரோடு: மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தான். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதலமைச்சர் தெரிவித்தார்.
