வாவ்! புதுச்சேரி டு சென்னை வெறும் ரூ.2 ஆயிரத்தில் விமான பயணம்! 

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வெறும் 2000 ரூபாயில் பயணிகள் விமான சேவை விரைவில் வர உள்ளது.

புதுச்சேரியிலிருந்து, தமிழகத்தில் பல முக்கிய மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ‘ஏர் சஃபா’ விமான சேவை நிறுவனம் வரும் தீபாவளி பண்டிகை முதல் 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த ஏர் சஃபா நிறுவனம், புதுச்சேரியிலிருந்து கோவை மற்றும் பெங்களூருவுக்கு சோதனை முறையில் 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்கியுள்ளது. 

விரைவில் இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. எப்படியும் வரும் தீபாவளி  முதல் சிறிய ரக விமானங்களை இயக்கும் திட்டம் தொடங்கும்.

ஒரு பயணத்துக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையிலான கட்டணங்கள் நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதுச்சேரி – சென்னை இடையே இரண்டு விமான சேவை தேவைப்படும். 

புதுச்சேரியிலிருந்து சென்னை, வேலூர், மதுரை, சேலம், கோவை, திருச்சி, துத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், திருப்பதிக்கும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் மக்கள் இனி பயணம் செய்யலாம்.

குறிப்பு : நாட்டின் சிறிய நகரங்களை இணைக்கும் வகையில், உதான் திட்டத்தின் கீழ் தான் புதுச்சேரியில் இருந்து 19 இருக்கைகள் கொண்ட விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.