போரை முடிவுக்கு கொண்டு வர 12 அம்ச அமைதி திட்டம்: சீனா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்


உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பாக சீனா அமைதி திட்டத்தை வெளியிட்ட பிறகு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஓராண்டு நிறைவு

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கிய நிலையில், தற்போது போர் தாக்குதல் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

போரை நிறுத்துவதற்கான எத்தகைய பேச்சுவார்த்தைகளையும் மேற்கத்திய நாடுகளோ, உக்ரைனோ அல்லது ரஷ்யாவோ முன்னெடுப்பதாக இதுவரை தெரியவில்லை.

போரை முடிவுக்கு கொண்டு வர 12 அம்ச அமைதி திட்டம்: சீனா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் | Macron To Visit China After Peace Plan UnveiledAP

இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இருந்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் 12 அம்ச அமைதி திட்டத்தை சீனா வெளியிட்டுள்ளது.

மேக்ரான் சீனா பயணம் 

சீனாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஓரளவு போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெய்ஜிங்கின் உதவியைத் தொடர, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

சீனா, “ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும், அதனால் அது ஒருபோதும் இரசாயன அல்லது அணு ஆயுதங்களை பயன்படுத்தாது” என்று மேக்ரான் பாரிஸ் விவசாய கண்காட்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

போரை முடிவுக்கு கொண்டு வர 12 அம்ச அமைதி திட்டம்: சீனா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் | Macron To Visit China After Peace Plan UnveiledGetty

தலைவர் நிராகரிப்பு

எவ்வாறாயினும், சீனாவின் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தை  அனைத்து தலைவர்களும் வரவேற்கவில்லை.

அந்த வகையில் சீனாவின் அமைதி திட்டத்தில் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.