தமிழகத்தில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வதந்தி பரவியுள்ளது.
குறிப்பாக 10, 20 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் மற்றும் பேருந்து நடத்துனர்கள் வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்து வந்தது. இது வெறும் வதந்தி தான் என பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பிற்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி அதிகப்படியான 10, 20 ரூபாய் நாணயங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நாணயங்கள் அனைத்து வங்கி மற்றும் இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாங்கதுரை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.
ஆனால் இன்னமும் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.