Ajith: அஜித் பற்றிய ரகசியம் சொன்ன எதிர்நீச்சல் மாரிமுத்து: தல ஏன் அப்படி பண்ணுச்சு!

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் குமார் அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் அசத்திய வாலி படம் கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

அண்ணன் அஜித்துக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது. இருப்பினும் வெற்றிகரமான தொழில் அதிபராக இருப்பார். தம்பி அஜித்தின் காதல் மனைவியான சிம்ரனை அடைய முயற்சி செய்வார் அண்ணன்.

இந்த போட்டாரத்தில் அண்ணனிடம் இருந்து மனைவியை எப்படி காப்பாற்றுகிறார் தம்பி என்பது தான் கதை. அஜித் தன் நடிப்பால் மிரட்டியிருந்த வாலி படம் இன்றளவும் பிரபலம். அந்த படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

வாலி படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தவர் எதிர்நீச்சல் ஜி. மாரிமுத்து. அவர் அந்த படம் பற்றி கூறியதாவது,

அண்ணன் யார், தம்பி யார் என்று தெரியாமல் சிம்ரன் குழம்புவார். அந்த நேரத்தில் அஜித் தன் மீசையை எடுத்திருப்பார். இருந்தாலும் அது யார் என்று தெரியாமல் சிம்ரன் பயப்படுவார். அப்பொழுது தான் அது தம்பி அஜித் என்பது தெரிய வரும். இதை அண்ணனிடம் சொல்ல சென்றால் அவரும் மீசையை எடுத்திருப்பது போன்று காட்சி.

ஆனால் அந்த காட்சியை பிறகு எடுத்துக்கொள்ளலாம் என்றார் அஜித். அதற்குள் அவர் வேறு ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டதால் மீசையை எடுக்க மறுத்துவிட்டார். இதனால் அந்த காட்சியை வைக்கவில்லை. அந்த காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் பயங்கரமாக இருந்திருக்கும் என்றார்.

வாலி படம் குறித்த இந்த தகவல் அறிந்த ரசிகர்களோ, அடப்பாவமே அந்த மீசையை எடுக்கும் காட்சியை வைத்திருந்திருக்கலாம். தல பயங்கரமாக இருந்திருப்பார், மிஸ்ஸாகிடுச்சே என ஃபீல் செய்கிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

AK62:ஏ.கே. 62க்காக மகிழ் திருமேனிக்கு கிடைத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்: கோடி கோடியா கொட்டுதே

அஜித் படத்தை இயக்க மகிழ் திருமேனிக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம் லைகா நிறுவனம். இதுவரை ரூ. 1 கோடி கூட வாங்காத மகிழ் திருமேனிக்கு ஒரேயடியாக ரூ. 10 கோடி கிடைப்பது குறித்து சினிமா ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான்யா லைஃப் டைம் செட்டில்மென்ட் என்கிறார்கள். அஜித்தின் ஒரு படத்தை இயக்கினால், எப்படியும் அடுத்து இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் மகிழ் திருமேனியின் லைஃப் செட்டிலாகிவிட்டது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.கே. 62 படத்தில் நடிக்க அஜித் குமாருக்கு ரூ. 105 கோடி சம்பளமாம். அஜித் கெரியரிலேயே இது தான் அதிகபட்ச சம்பளமாகும். ஏ.கே. 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.