திருவனந்தப்புரம்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,259 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் பயணியின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மாத்திரை வடிவில் உள்ள 4 தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, துபாயில் இருந்து வந்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement