பறவைக் காய்ச்சலால் பெரு நாட்டில் 63 ஆயிரம் பறவைகள், 716 கடற்சிங்கங்கள் உயிரிழப்பு..!

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள கடற்கரைகளில், பறவைக்காய்ச்சல் பாதிப்பால் நீர் நாய்கள் மற்றும் கடற்சிங்கங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன.

அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சல் பரவத் தொடங்கிய நிலையில், இதுவரை 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளும், 716 கடற்சிங்கங்களும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தால், பெருவில் பறவைக்காய்ச்சல் சுகாதார அவசரநிலை நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.