காஞ்சிபுரம்: ராஜஸ்தானைச் சேர்ந்த சுற்றுலா பயணி, தனது ஆட்டோவில் தவறவிட்ட ரூ. 50,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. வீட்டிற்கு சென்ற பிறகு, இருக்கையில் பை இருந்ததை கவனித்துள்ளார்; அதில் பணம், அடையாள அட்டை இருந்ததை பார்த்ததும், பயணிகளை இறக்கி விட்ட தங்கும் விடுதிக்குச் சென்று உடைமைகளை ஒப்படைத்தார்
