ஹொங்ஹொங்கில் பல துண்டுகளாக மீட்கப்பட்ட மொடல் அழகியின் உடல்., 3 பேர் கைது


ஹொங்ஹொங்கின் வடக்கு தை போ மாவட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் மொடல் அழகியின் உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளுடன், இறைச்சி வெட்டும் இயந்திரம், மின்சார ரம்பம் மற்றும் சில ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

ஹொங்ஹொங் மொடல் அழகி

அப்பி சோய் (Abby Choi) ஒரு சர்வதேச மாடலாக இருந்தார் மற்றும் பாரிஸில் நடந்த எலி சாப் ஸ்பிரிங் சம்மர் 2023 ஹாட் கோச்சர் ஷோவில் பங்கேற்று, புகைப்படம் எடுக்கப்பட்டதில் மேலும் பிரபலமானார்.

ஹொங்ஹொங்கில் பல துண்டுகளாக மீட்கப்பட்ட மொடல் அழகியின் உடல்., 3 பேர் கைது | Hong Kong Model Abby Choi Dismembered 3 ArrestsMarie-Paola Bertrand-Hillion/Abaca Press/SIPA/AP

இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில், அவரது வாடகை வீட்டில் கண்டெடுக்கப்பட்டார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், அபியின் முன்னாள் கணவர் உட்பட 3 பேரை பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

அப்பி சோயின் முன்னாள் கணவர் ஹொங்ஹொங்கில் உள்ள கப்பலில் வைத்து ‘தப்பி செல்ல’ முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொங்ஹொங்கில் பல துண்டுகளாக மீட்கப்பட்ட மொடல் அழகியின் உடல்., 3 பேர் கைது | Hong Kong Model Abby Choi Dismembered 3 ArrestsXXABBYC/INSTAGRAM

அப்பி சோயின் தலை, உடற்பகுதி அல்லது கைகளை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவிலும்.., 

சமீப காலங்களில், இந்தியாவிலும் இதுபோன்று கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளை பல துண்டுகளாக வெட்டப்பட்டு பதுக்கி வைத்த பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், பிப்ரவரி 14 அன்று, சாஹில் கெஹ்லாட் என்ற நபர் தனது பெண் காதலியைக் கொன்று, அவளது உடல் பாகங்களைத் துண்டித்து, அவற்றை தனது தாபாவின் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்தார்.

இதேபோல், நவம்பர் 14 அன்று டெல்லியில் நடந்த சம்பவத்தில், அஃப்தாப் அமீன் பூனாவாலா என்ற நபர், தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்களில் நகரம் முழுவதும் அவரது உடல் உறுப்புகளை அப்புறப்படுத்திய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.