இணையப் பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலமர்வு


அமைச்சில் பணியாற்றும் பணியாளர்கள், உத்தியோத்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத்
துதரங்களில் பணியாற்றும் இராஜதந்திர அதிகாரிகளுக்கான இணையப் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது. 

திறன் அபிவிருத்தி திட்டங்களின் வரிசையில் இந்த செயலமர்வு இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இணையப் பாதுகாப்பு மற்றும் இணையத் தொகுதி குறித்த ஊடாடும் செயலர்வை நடத்தினர்.

இணையப் பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலமர்வு | Ministry Of Foreign Affairs Sri Lanka

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் விசேட திட்டப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மதுரிகா ஜோசப் வெனிஞ்ஜரால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன செயற்றிறன், சேமிப்பு மற்றும் மேம்பட்ட சேவைகளுக்கான கருவியாக பொதுத்துறையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ள நேரத்தில் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பாதுகாப்பு பொருளாதாரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் டிஜிட்டல் மற்றம் இணையத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அபிவிருத்தியடைந்து வரும் இணையப் பாதுகாப்பு சிக்கல்கள் இராஜதந்திரப் பணிகளுக்கு பொருத்தமானவையாகும். வெளிவிவகார செயலாளர் இது சம்மந்தமாக சர்வதேச மாற்றங்களை அறிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.  

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.