ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை 10 வது சுற்று எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் 10 சுற்றுகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.
15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணக்கையில், தற்போது 10 வது சுற்று எண்ணப்பட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் 47,955வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், நான்காவது இடத்தில் தேமுதிக வேட்பாளரும் உள்ளனர்.

3 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 76527 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 28572 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6123 வாக்குகளையும், தேமுதிக வேட்பாளர் 852 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
டெபாசிட் தொகை பெறுவதற்கு 28000 வாக்குகள் பெற வேண்டும். அதன்படி, ஏற்கனவே காங்கிரசை கட்சி வேட்பாளர் பெற்ற நிலையில், தற்போது 10 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் பெற்றுள்ளார்.
முன்னதாக அதிமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று திமுகவினர் கூறிய நிலையில், அதனை முறியடித்து அதிமுக 28572 பெற்றுள்ளது. மேலும் இந்த தேர்தலில் அதிமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.