நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி| Crude oil pipeline fire in Nigeria kills 12

அபுசா: நைஜீரியாவில் கச்சா எண்ணெய் குழாயிலிருந்து, கச்சா எண்ணெய் திருட முயன்ற போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வந்ததாக தெரிகிறது. அதேபோல் கச்சா எண்ணெய் குழாயில் இருந்து மர்மநபர்கள் சட்டவிரோதமாக திருடி வெளி சந்தையில் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், நைஜர் டெல்டா மகாணம் மைஹா நகர் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் குழாயில் மர்மநபர்கள் சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருட முயற்சித்தனர். இதில் எதிர்பாராதவிதமாக கச்சா எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

latest tamil news

இதில் 12 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.