சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் மண்ணெண்ணெய் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார். மண்ணெண்ணெய் குண்டு வீசி விட்டு தப்பியோடிய போது உடலில் தீப்பிடித்ததில் சுரேஷ் என்பவர் காயமடைந்தார். சுரேஷை கைது செய்த போலீசார் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
