Dhanush, Suriya: தனுஷ் கூட நடிக்கக் கூடாது… ஜோதிகாவுக்கு ஆர்டர் போட்ட சூர்யா!

நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா ஆர்டர் போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா ஜோதிகாதமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சூர்யா, கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
​ Khushbu Sundar: என் 8 வயதில் அப்பாவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்… நடிகை குஷ்பு பகீர்!​
சூர்யா ஜோதிகா படங்கள்ஜோதிகா அஜித்தின் வாலி படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள ஜோதிகா, சூர்யாவுடன் மட்டும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், சில்லுனு ஒரு காதல் ஆகிய 7 படங்களில் இணைந்து நடித்துள்ளார். படங்களில் இணைந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
​ நயன்தாரா பயந்தது மாதிரியே நடக்குது!​
இரண்டு குழந்தைகள்இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை ஜோதிகா, குழந்தைகள் வளர்ந்த பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
​ Rajinikanth, Dhanush: வேண்டாம் என்ற ரஜினி.. வெறித்தனமாய் செய்த தனுஷ்… பிரம்மாண்ட வீட்டின் ரகசியம்!​
தனுஷுடன் நடிக்க வேண்டாம்இந்நிலையில் நடிகர் சூர்யா, தனுஷுடன் நடிக்கக் கூடாது என நடிகை ஜோதிகாவுக்கு ஆர்டர் போட்ட தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகா சூர்யாவை காதலிக்க தொடங்கியதில் இருந்தே அவருடைய சொல்படிதான் கேட்டு நடந்து வருகிறார். சூர்யா சொல்லும் நடிகர்களுடன் இணைந்து நடித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகர் தனுஷுடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என திருமணத்திற்கு முன்பே நடிகர் சூர்யா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
​ Dhanush, Rajinikanth: இது பாஷா… தனுஷின் அசுரன் படத்தை பார்த்து கைத்தட்டி குதித்த ரஜினி… பிரபலம் பகிர்ந்த சுவாரசிய தகவல்!​
யாரடி நீ மோகினிசூர்யா ஜோதிகா திருமணத்திற்கு முன்பு தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் கமிட் ஆனாராம் ஜோதிகா. ஆனால் தனுஷுடன் ஜோதிகா நடிப்பதை விரும்பாத சூர்யா, அவருடன் நடிக்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சூர்யாவுக்காக யாரடி நீ மோகினி பட வாய்ப்பை உதறி தள்ளியுள்ளார் நடிகை ஜோதிகா. அதன்பிறகுதான் அந்த கதாப்பாத்திரத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். நயன்தாராவுக்கு அந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
​ Swara Bhasker: முதலிரவு போட்டோவை வெளியிட்ட தனுஷ் பட நடிகை… கழுவி ஊற்றும் ரசிகர்கள்!​
மும்பையில் செட்டில்என்ன காரணத்திற்காக சூர்யா, தனுஷுடன் ஜோதிகா நடிப்பதை விரும்பவில்லை என்ற காரணம் வெளியாகவில்லை. தற்போது நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் பிள்ளைகளின் படிப்புக்காக மும்பையில் செட்டில் ஆகி விட்டனர். தற்போது மும்பையில் உள்ள சூர்யா சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சென்று சந்தித்தார் அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ​ Nayanthara: சும்மா கிளப்பி விடாதீங்க… அந்த பேச்சுக்கே இடமில்ல.. கொதிக்கும் நயன்தாரா ரசிகர்கள்!​
Suriya Jyothika

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.