டெல்லி: சிபிஐ காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 20 வரை மணிஷ் சிசோடியாவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது.
