Rajinikanth, Jayalalitha: ரஜினியை எதிரியாக பார்த்தாரா ஜெயலலிதா? புட்டு புட்டு வைத்த பயில்வான்!

நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

பயில்வா ரங்கநாதன்பிரபல பத்திரிகையாளராகவும் நடிகராகவும் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவை எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் தற்போது வரை நன்கு அறிந்தவர். சினிமா பிரபலங்களின் ரகசியங்களையும் சினிமாவில் உள்ள நல்லது கெட்டதுகளையும் தெரிந்துள்ள பயில்வான் அவ்வப்போது தான் அறிந்த தகவல்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் என்ன பிரச்சனை இருந்தது, ரஜினிகாந்தை ஜெயலலிதா எதிரியாக பார்த்தாரா என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
​ சத்தமே இல்லாமல் இப்படி ஒரு சாதனை செய்த மீனா!​
வசூல் சக்கரவர்த்தி ரஜினிகாந்த்அதில் அவர் பேசியிருப்பதாவது. எம்ஜிஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பவர் ரஜினிகாந்த். 72 வயதான போதும் இன்னும் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் இந்தியாவிலேயே நடிகர் ரஜினிகாந்துதான். ஆரம்பத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் கே பாலச்சந்தர் மூலம் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் பின்னர் சூப்பர் ஸ்டார் ஆனார். ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது இயக்குநர் கே பாலச்சந்தர்தான். ரஜினிகாந்த், எஸ்பி முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், இளையராஜா ஆகியோரின் கூட்டணி சக்ஸஸ் கூட்டணிதான். ஜெயலிதா சினிமாவை விட்டு விலகிய பிறகு துக்ளக்கில் கட்டுரை எழுதி வந்தார்.
​ Actress: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான புஸ் புஸ் நடிகை.. சிக்கியிருந்தா சின்னாபின்னாம்தான்!​
ரஜினிகாந்துக்கு டார்ச்சர்ஜெயலலிதா முதல்வர் ஆன பிறகு அதிக கெடுபிடி காட்டினார். அவர் கார் சாலையில் செல்லும் போது சாலைகளில் வாகனங்கள் இரு புறமும் நிறுத்தப்படும். வாகனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என போலீசார் மிரட்டுவார்கள். ஜெயலலிதான் இந்த போக்கு ரஜினிக்கு பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் எப்போதும் சோளா ஹோட்டலில் இரவு மதுக்குடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்வார். ஆனால் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள போலீசார், ஜெயலலிதான் வீடு இருப்பதால் ரஜினியை நடந்து செல்லக் கூடாது என டார்ச்சர் செய்தனர்.
​ Charmila: அவங்கெல்லாம் ஆண் விபச்சாரிகள்.. முன்னாள் காதலர்களை திட்டி தீர்த்த பிரபல நடிகை!​
தமிழகத்தை காப்பாற்ற முடியாதுஇதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் ரஜினிகாந்த். இருப்பினும் அதை தாங்கி கொண்டு அடுத்த நாள் ஜெயலலிதாவுக்கு போன் போட்டு போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதை சொன்னார். அதனை தவறாக எடுத்துக்கொள்ளாத ஜெயலலிதா, அவர் வீடும் இங்கேதான் இருக்கிறது. அவர் பாட்டுக்கு நடந்து செல்கிறார், அவரை ஏன் தொல்லை செய்கிறீர்கள்? அவரை இனிமேல் எதுவும் கேட்க கூடாது என போலீசாருக்கு உத்தரவு போட்டார்.
அப்போது ஜெயலலிதா ஆட்சி நடத்திய விதம் ரஜினிக்கு பிடிக்கவில்லை. மூப்பனார்- திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார் ரஜினி. மீண்டும் ஜெயலலிதா முதல்வரானால் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.
​ Tiktok Elakkiya: ஏன் இவ்ளோ பெருசா இருக்கு? டிக்டாக் இலக்கியாவிடம் பச்சையாக கேட்ட ஷகீலா!​
ஜெலலிதா எதிரியாக நினைக்கவில்லைஇதனை கேட்ட மக்களும் ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கினர். ஆனால் ஜெயலலிதா ரஜினிகாந்தை எதிரியாக நினைக்கவில்லை. ரஜினியின் மூத்த மகளின் திருமணத்திற்கு அழைத்ததும் முதல் ஆளாய் போய் நின்றார் ஜெயலலிதா. ஜெயலலிதா தாலி எடுத்து கொடுக்க ரஜினி மகளின் திருமணம் சிறப்பாய் நடைபெற்றது. சமீபத்தில் யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. ரஜினிகாந்த் திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மைதான். இருப்பினும் எனது மகளின் திருமணத்திற்கு முதல் நபராக வந்தார் ஜெயலலிதா என பாராட்டினார் ரஜினிகாந்த். அதுதான் ரஜினிகாந்த்.
​ Vijayakanth: எனக்கே அடையாளம் தெரியல… விஜயகாந்தின் போட்டோவை பார்த்து கதறிய நடிகர்… திடீரென வைரலாகும் வீடியோ!​
ஜெயலலிதாவை பாராட்டிய ரஜினிதிமுக ஆட்சி நடக்கும்போது ஜெயலலிதாவை பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். ஜெயலலிதாவும் ரஜினியை எப்போதும் எதிரியாக நினைக்கவில்லை. மூத்த சகோதரி என்ற முறையில் ரஜினி மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார். ஜெயலலிதா எப்போதுமே தனது புகுந்த வீடு அரசியல், தாய்வீடு சினிமா என்பார். அதை போன்றே தமிழ் சினிமாவுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார் ஜெயலலிதா. ரஜினிகாந்தும் அதன் பிறகு ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை.
​ Ajith: என் வீட்டு வாசல்லயே அஜித்தும் ஷாலினியும் காத்திருந்தாங்க… பிரபல தயாரிப்பாளர் உருக்கம்!​
ஜோடியாக நடிக்க மறுத்தார்ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்கவில்லை. தயாரிப்பாளர் கே பாலாஜி ஜெயலலிதாவிடம் கதை சொன்னார். அந்த கதையை கேட்ட ஜெயலலிதா, கதை பிடிக்கிறது ஆனால் வேறு ஒருவரை நடிக்க வையுங்கள் என்று மறுத்துவிட்டார். அப்போது அவர் அரசியலுக்கு வந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க மறுத்தார் ஜெயலலிதா. மற்றப்படி ஜெயலலிதாவுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரச்சனை என்பது உண்மையில்லை… என விலாவரியாக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
​ Varalaxmi: டிவி சேனல் தலைவர் வீட்டிற்கே வந்து ஹோட்டலுக்கு அழைத்தார்… மீண்டும் பகீர் கிளப்பிய வரலட்சுமி!​
Rajinikanth Jayalalitha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.