கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி தொழிற் சந்தை

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் பாரிய தொழிற் சந்தை (mega career fair)யை மாவட்டச் செயலக வளாகத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொழிற் சந்தைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் (08) இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது குறித்த தொழிற்சந்தையில் பங்குபெறும் அரச திணைக்களங்கள், கற்கை நெறிகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் வழகுநர்கள் தமது நோக்கங்கள், தேவைப்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்கள்.

தொழிற் சந்தை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான கற்கை நெறிகளுக்கான வழிகாட்டல்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்காக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.