சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்திகளை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாகவும், வெளிமாநில மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்து அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் டிஜிபி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டி, வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் வதந்தியாக பரவி வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். இதனால், தமிழ்நாட்டின் தொழிற்நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வதந்திகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு விளக்கங்களை அளித்ததுடன், […]
