பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த விடயம்..தரையிறங்கியதும் கைது செய்த பொலிஸ்


இந்தியாவில் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்த பெண் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

புகைபிடித்த பெண் பயணி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா சக்ரவர்த்தி(24) என்ற இளம்பெண், கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்தார்.

கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் சில மணிநேரங்களில் பெங்களூருவில் தரையிறங்கியது.

இதற்கிடையில் பயணி ஒருவர் கழிவறைக்குள் சிகரெட் புகைப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர்.

பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த விடயம்..தரையிறங்கியதும் கைது செய்த பொலிஸ் | Woman Arrested Who Smoke In Flight India

@PTI

அதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து பிரியங்கா வெளியே வந்த பின்னர், குப்பைத் தொட்டியில் சிகரெட் துண்டு அணைக்காமல் இருப்பதைக் கண்டு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பாதுகாப்பு கருதி குப்பைத் தொட்டியில் தண்ணீரை ஊற்றி, கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

அதன் பின்னர் பிரியங்கா சக்ரவர்த்தியை ஒழுக்கமற்ற பயணியாக அறிவித்த கேப்டன், பெங்களூரு விமான நிலைய பாதுகாப்பிற்கு தகவல் கொடுத்தார்.

பெங்களூருவில் விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த விடயம்..தரையிறங்கியதும் கைது செய்த பொலிஸ் | Woman Arrested Who Smoke In Flight India  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.