அண்ணாமலையை பொளந்த செல்லூர் ராஜு; வெளுத்த அமர் பிரசாத் ரெட்டி.!

அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு அதிகமாகிவிட்டது என கூறிய செல்லூர் ராஜுவை, தெர்மாகோல் ஆராய்ச்சியாளர் என அமர்பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் கூச்சல் குழப்பம் அதிகரித்து வருவதாக அக்கட்சியினரே கூறிவருகின்றனர். அக்கட்சியின் நீண்டநாள் உறுப்பினரும், அடுத்த மாநில தலைவர் அந்தஸ்தில் இருந்தவருமான காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

அதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். அதேபோல் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூரியா சிவா பாஜகவில் இருந்து வெளியேறினார்.

மேலும் பல பாஜக தலைவர்களின் அந்தரங்க உரையாடல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல் டெல்லியில் செல்வாக்கு பெற்ற கே.டி.ராகவனின் அந்தரங்க வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து ஒதுங்கி கொண்டார். வீடியோ வெளியான அண்ணாமலைக்கு பங்கிருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இந்தநிலையில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து வெளியேறி, அண்மையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல் ஐடிவிங், ஓபிசி அணி உள்ளிட்ட சில பிரிவுகளில் இருந்து சுமார் 13க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளது பாஜகவின் கடும் உட்கட்சி பிரச்சனையை அம்பலப்படுத்தியுள்ளது.

கட்சியில் அண்ணாமலை தான் மட்டுமே பிரகாசிக்க வேண்டும், ஊடக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால் தான் பாஜகவில் இருந்து நீண்ட நாள் உறுப்பினர்கள் வெளியேறிவருதாக திருமாவளவன் கருத்து தெரிவித்தார். பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகளை அதிமுக அனுமதிக்கக் கூடாது என பாஜகவினர் காரசாரமாக பேசி வருகின்றனர்.

இதையொட்டி இருதரப்பிலும் வார்த்தை போர் மூண்டுள்ளது. கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரிக்க, அரியலூரில் அண்ணாமலை உருவப்படத்தை அதிமுகவினர் எரித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ‘‘பாஜக கட்சி தமிழ்நாட்டில் ஏன் வளரவில்லை என்பதற்கு இதுதான் காரணம். திராவிட இயக்கங்கள் போல வளரணும் என்றால் அது முடியாது. அந்த இயக்கத்திற்கு அதற்கான தகுதியும் கிடையாது. அண்ணாமலை வாய்க் கொழுப்பு அதிகமாகிவிட்டது, அவருக்கு அடக்கம் தேவை. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதா உடன் ஒப்பிட்டு பேசுவதற்கு எவனுக்கும் தகுதியே கிடையாது.

அவரை போல் எவனும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது. பாஜக மதிக்கக் கூடிய கட்சியாக இருந்தது. தற்போது அதில் சில விஷமத்தனமான கிருமிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் கண்டித்து தமிழக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவில் இருந்து ஆட்களை இழுத்து வந்து அதிமுகவை வளர்க்கும் அளவிற்கு எங்கள் கட்சி மோசமாக செல்லவில்லை’’ என்று கடுமையாக பேசினார்.

மதுபான கடையை இடமாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

செல்லூர் ராஜூவின் பேச்சு அதிமுக மற்றும் பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தநிலையில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளருமான அமர் பிரசாத் ரெட்டி செல்லூர் ராஜூவை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, ‘‘இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.