கடந்த 2006-ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் உழவர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இதற்கிடையே என்.எல்.சி நிர்வாகத்தின் அராஜகம், ஏமாற்று வேலையே தெரிந்துகொண்ட மக்கள், தங்களின் நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது முடிவுக்கு வந்தனர்.
இந்நிலையில், என்.எல்.சி நிறுவனம், இன்று தமிழ்நாடு அரசு உதவியுடன் அந்த நிலங்களை சமன்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பணியைத் தொடங்கியுள்ளது.
இரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் தலைமையில் சுமார் 1000-க்கும் கூடுதலான காவலர்களை அந்த பகுதியில் குவித்து, சாலைகளை தடுத்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு சிறைபடுத்தப்படுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் பணி இன்று அரங்கேறியுள்ளது.
மேலும், மக்களை அச்சுறுத்தும் வகையில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் வஜ்ரா ஊர்தி, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் ஊர்திகளையும் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி போராட வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துனர்.
முன்னதாக, சம்பவம் குறித்து தகவலறிந்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றன.
கடலூர், வளையமாதேவி பகுதியில் பொதுமக்களை சிறைப்படுத்தி, காவல்துறையினரை குவித்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்த என்எல்சி மற்றும் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் இன்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்பது #பாமக சட்டமன்ற உற்ப்பினர்களும் பொறுப்பாளர்களும்தானே தவிர,
திமுகவின் MRK.பன்னீர்செல்வமோ அல்லது அதன் ஆதரவு வேல்முருகனோ அல்ல..!
ஓட்டு போடுவதற்கு முன்பு நன்றாக சிந்தியுங்கள் மக்களே 😡😡😡#NLCIndiaAtrocities pic.twitter.com/DWhv2peCDr
— பொன்.பா.Son🔥🔥🔥 (@PonPaaSon) March 9, 2023