அகர்தலா: திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சாஹா நேற்று முன்தினம் 2-வது முறையாக பதவியேற்றார். அவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசிய பின் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே சென்றார்.
அவரது பாதுகாப்பு வாகனங்களை, வெள்ளை நிற டாடா டைகோர் கார் பின்தொடர்ந்ததும் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது, மின்னல் வேகத்தில் பாதுகாப்பு வாகனங்களை முந்திச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த பாதுகாப்பு விதிமீறல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது, ஆந்திர மாநில எம்.பி.யின் உதவியாளர் என்று கூறிய ஒருவர் அமித் ஷாவை சந்திக்கப்போவதாகக் கூறினார். விதிகளை மீறிய அந்த நபர் கைது செய்யப்பட்டார்.