டெல்லி: ரயில்வேதுறை ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, பீகாரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ரயில்வே துறையில் வேலை பெற உறவினர்கள் பெயரில் நிலம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை நடத்தப்பட்டது.
