அரியலூர்: அரியலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக எழுத்தாளர் பணி வாங்கித்தருவதாக பிரகாசம் என்பவரிடம் ரூ.50,000 பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் நிரந்தர பணி வாங்கி தருவதாக கூறியும் பிரகாசம் மற்றும் பிரகாசத்தின் உறவினர்கள், நண்பர்களிடமிருந்து எழுத்தாளர் பணி வாங்கித்தருவதாக கூறியும் ரூ.69,35,000 குணசேகரன் பெற்றதாகவும் புகார் எழுந்தது. குணசேகரன் போலி அரசு பணி நியமன ஆணைகளை தயார் செய்து அவர்களுக்கு வழங்கியதாகவும் போலி அரசாணை குறித்து கேட்ட பிரகாசத்தை கொலைசெய்து விடுவதாக மிரட்டியதாக போலீசில் பிரகாசம் புகார் அளித்தார். அதன் பேரில் குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.