இலவச கோழிகள் வழங்கும் பிரெஞ்சு நகரம்: எதற்காக தெரியுமா?


பிரெஞ்சு நகரம் ஒன்று தன் குடிமக்களுக்கு இலவச கோழிகளை வழங்கிவருகிறது.

எதற்காக இந்த இலவச கோழிகள் வழங்கும் திட்டம்? 

உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுப்பதற்காகவும், குப்பை அள்ளுவோரின் சுமையைக் குறைப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கையாம்.

அதாவது கோழிகள் நாளொன்றிற்கு 300 கிராம் உணவுப்பொருட்களை சாப்பிடமுடியுமாம். ஆகவே, வீடுகளில் வீணாக கொட்டப்படும் உணவுகளை இந்த கோழிகள் உண்ணலாம், உணவும் வீணாகாது, கோழிகளுக்கும் உணவு கிடைத்தது போலிருக்கும் என்பதால்தான் இந்த திட்டம்.

இலவச கோழிகள் வழங்கும் பிரெஞ்சு நகரம்: எதற்காக தெரியுமா? | French Town With Free Chickens Do You Know Why

Photo by PHILIPPE HUGUEN / AFP

யாருக்கெல்லாம் கோழிகள் கிடைக்கும்?

இந்த கோழிகள் எல்லருக்கும் சும்மா கிடைத்துவிடாது. தங்கள் வீட்டில் கோழிகளை பாதுகாப்பாக வளர்க்க முடியும் என கருதுவோர், முறைப்படி விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீடு ஒன்றிற்கு இரண்டு கோழிகள் கொடுக்கப்படும்.

விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் கோழிகளைப் பார்க்க அதிகாரிகளை அனுமதிக்கவேண்டும். அவர்கள் வந்து இந்த வீடுகளில் கோழிகள் முறைப்படி பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.