Ajith, AK 62: ஏகே 62க்காக எடையை குறைத்த அஜித்? க்ளீன் ஷேவ்.. கூல் லுக்… துள்ளிக் குதிக்கும் ரசிகாஸ்!

ஏகே 62 படத்திற்காக நடிகர் அஜித் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தின் வேலைகளும் நடைபெற்று வந்தன. அதன்படி அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கதை விஷயத்தில் திருப்தியாகாத அஜித் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கியதாக கூறப்பட்டது.
​ அதில் சமரசம் செய்யாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
ஏகே 62இதையடுத்து அஜித்தின் ஏகே 62 படத்தை தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனிதான் இயக்கவுள்ளார் என தகவல் பரவி வருகிறது, மேலும் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் தகவல் பரவி வருகிறது.
​ Chinmayi, Vairamuthu: ‘காம வெறியர்களை கேட்கவில்லை’.. வைரமுத்துவை கன்னாபின்னாவென விளாசிய சின்மயி!​
கூல் லுக்இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகர் அஜித், தற்போது சென்னை திரும்பியுள்ளார். அஜித்தை நேரில் பார்த்த ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதில் க்ளீன் ஷேவ்வில் கூல் லுக்கில் உள்ளார் அஜித். இந்த போட்டோக்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
​ Naresh, Pavithra Lokesh: 2 முறை விவாகரத்தான நடிகையை 4வது திருமணம் செய்த சூப்பர் ஸ்டாரின் அண்ணன்!​
எடையை குறைத்த அஜித்இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் ஏகே 62 லுக்கா என கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அஜித்தின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அஜித் எடையை குறைத்திருப்பதாக கூறி வருகின்றனர். துணவு படத்தில் இருந்ததை விட தற்போது எடை குறைந்து வயதும் குறைந்து இளமை கூடியிருப்பதாக கூறி வருகின்றனர். ​ Aishwarya Rajinikanth: திடீரென செல்வா அத்தானை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… காரணம் இதுதானாம்!​
4 மாதங்களில்…இதனிடையே ஏகே 62 படத்தின் ப்ரீ புரடெக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகம் வரும் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நான்கு மாதங்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்றும் மகிழ் திருமேனியிடம் அஜித் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. ​ Vignesh Shivan, Nayanthara: கதை அப்படி போகுதோ… அஜித்தை பழிதீர்க்கும் விக்னேஷ் சிவன்?​
Ajith

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.