வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவனந்தபுரம் :கேரளாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத் துறை பெண் அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சமீபத்தில் வியாபாரி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்தார். அதில், ஏழு 500 ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த அதிகாரிகள், போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நோட்டுகளை கொடுத்தது எடத்துவா என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயத் துறை பெண் அதிகாரி ஜிஷாமோல், 39, என்பது தெரிய வந்தது.
![]() |
அவரிடம் விசாரித்தபோது, தெரிந்தே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய ஜிஷாமோல், பின் விவசாயத் துறையில் பணியில் சேர்ந்தார்.மாராரிகுளம் விவசாய அலுவலகத்தில் பணிபுரிந்த போது, முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கும் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement