நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த 2 வாரமாக முட்டை விலை 440 காசாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர். செல்வராஜ், முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்த்தி, 445 காசாக நிர்ணயம் செய்துள்ளார். மற்ற மண்டலங்களில் முட்ைட விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
