டில்லியில் ஜப்பானிய பெண் மானபங்கம்: 3 பேர் கைது| Japanese Tourist, Who Was Harassed During Holi Celebrations, Leaves India

புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவரை மானபங்கபடுத்திய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய டில்லியில் உள்ள பஹர்கன்ஜ் பகுதியில் தங்கியிருந்த அந்த பெண்ணை, ஹோலி கொண்டாட்டத்தின் போது, சிலர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்ததுடன், கலர்பொடிகளை தூவியும், தலையில் முட்டையை உடைத்தும் தாக்கினர்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதேநேரத்தில், இது குறித்து அந்த பெண் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை.

சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவை தொடர்ந்து, 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.