ஜெர்மனியின் பெர்லின் நகரில் பெண்கள் பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி குளிக்க விரைவில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலாடையின்றி குளித்ததற்காக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் சட்டப்போராட்டம் தொடர்ந்ததையடுத்து, பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர உடல் கலாசாரம் என்று அழைக்கப்படுவதை ஆதரிப்போர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க ஜெர்மனியின் லோயர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன் மற்றும் நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகன் ஆகிய இடங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.