வெடித்து சிதறும் நிலையில் எரிமலை : 3 கி.மீ. தூரத்திற்கு கரும்புகை பரவும் என எச்சரிக்கை| Erupting Volcano : 3 km. Beware of the spread of far-flung cane

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜகார்தா : இந்தோனேஷியாவில், ‘மெராபி’ எரிமலை வெடித்து சிதறும் நிலையில் இருப்பதால் அதிலிருந்து வெளியேறும் தீக்குழம்பு 1.5 கி.மீ. தூரம் பரவும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இங்கு, யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, இன்று நள்ளிரவு, அல்லது அதிகாலையில் வெடித்துச் சிதற உள்ளதாக அப்பகுதி கிராமவாசிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

latest tamil news

இதையடுத்து அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தவிர எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த மெராபி எரிமலை 450 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு சூழல்களில், எரிமலைக் குழம்பை வெளியேற்றி வருகிறது. இரு முறை வெடித்து சிதறியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.