Ajith: மகிழ்திருமேனி அல்ல ஷங்கருக்காக வெறித்தனமாக மாறிய அஜித்?!: ப்ப்பா, இது வேற லெவல்

பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி வரும் படத்தை தற்போதைக்கு ஆர்.சி. 15 என்கிறார்கள். படத்தின் தலைப்பு மார்ச் 27ம் தேதி வெளியிடப்படுகிறதாம்.

ஆர்.சி. 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஆனால் படத்தின் வில்லன் யார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் தான் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்குமாறு அஜித் குமாரிடம் ஷங்கர் கேட்டாராம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அஜித்தும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இந்த தகவலை படக்குழு இதுவரை உறுதி செய்யவில்லை.

நடித்தால் நல்லவனாக மட்டுமே நடிப்பேன் என்று எல்லாம் அடம்பிடிக்காத ஆள் அஜித். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான வாலி படத்திலேயே நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இன்றளவும் பேசப்படுகிறது.

அதன் பிறகும் பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார். அஜித்தை வில்லனாக பார்த்தால் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். இந்நிலையில் அவர் மட்டும் ராம் சரணுக்கு வில்லனாக நடித்தால் அந்த படம் நிச்சயம் பெரிய அளவில் ரீச்சாகும் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

ஆர்.சி. 15 பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. அந்த படத்திற்கு சி.இ.ஓ. என தலைப்பு வைக்கப் போகிறார்கள் என கூறப்படுகிறது. அஜித் தன் உடல் எடையை குறைத்து, புது ஹேர்ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை அவரை பற்றியே பேச வைத்தது.

அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ஏ.கே. 62 படத்திற்காக தான் அப்படி வெறித்தனமான லுக்கிற்கு மாறியிருக்கிறாரோ என்றார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் மகிழ் திருமேனி அல்ல ஷங்கர் படத்தில் வில்லத்தனம் செய்யத் தான் அஜித் அப்படி மாறியிருக்கிறாரோ என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆர்.சி. 15 ஹீரோவான ராம் சரண் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Indian 2: சுற்றி வளைத்த கிராமத்தினர், தவித்த படக்குழு, குவிந்த போலீசார்: இந்தியன் 2 ஷூட்டிங்கில் பரபரப்பு

ராம் சரண் அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஷங்கர். அப்படி சதுரங்கபட்டினத்தில் சில சண்டைக் காட்சிகளை படமாக்கியபோது கிராமத்து மக்கள் அங்கு கூடிவிட்டார்கள்.

கோவிலுக்கு நன்கொடை கொடுக்குமாறு படக்குழுவை வலியுத்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து கிராமத்தாரை அங்கிருந்து கிளம்பிச் செல்ல வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.